அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
அழகும், திறமையும் இருந்தும் நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அடைந்தால் அதில் நடித்த நடிகரையோ, நடிகையோ ராசி இல்லாதவர் என்பார்கள். அந்த வகையில் அந்தக் காலத்தில் அப்படி ஒரு பெயரை பெற்றவர் எஸ்.பி.எல்.தனலட்சுமி. 1935ம் ஆண்டு நேஷனல் மூவி டோன் என்ற தயாரிப்பு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனியின் முதல் படம் 'பார்வதி கல்யாணம்'. முதல் படம் என்பதால் அதில் நடிக்க தகுதியானவர்களை தமிழ்நாடு முழுவதும் தேடினார் தயாரிப்பாளர் மாணிக்கம் செட்டியார்.
அந்த தேடலின் ஒரு பகுதியாக அவர் தஞ்சாவூர் சென்றபோது தனலட்சுமியின் நடன நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அவரையே தனது படத்தின் நாயகியாக தேர்வு செய்தார். நடனம் மட்டுமல்ல பாடுதிலும் திறமையானவராக இருந்தார் தனலட்சுமி. நடித்த முதல் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து பி.கே.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் 'வசந்த சேனா' படத்தில் நடித்தார். அதன் பின்னர் 'சௌபாக்கியவதி' படத்தில் நடித்தார். பின்னர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த 'காளமேகம்' படத்திலும், 'தேச பக்தி' என்ற படத்திலும் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தது ஒரு சில படங்கள் சுமாராக போனது.
7 படங்களில் மட்டுமே நடித்த தனலட்சுமி சினிமாவை விட்டு விலகி இசை கச்சேரிகளில் கவனம் செலுத்தினார். தனலட்சுமிதான் தனது அக்கா மகள் டி.ஆர்.ராஜகுமாரியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பின்னாளில் டி.ஆர்.ராஜகுமாரி தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னியாக மாறினார்.