அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் உலக அளவில் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
தெலுங்குப் படங்களுக்கு அமெரிக்காவில் எப்போதுமே அதிக வரவேற்பு இருக்கும். அங்கு தெலுங்கு மக்கள் அதிகம் வசிப்பதே அதற்குக் காரணம். 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் அங்கு பெரிய வசூலைக் குவித்தன. அவற்றிற்குப் பிறகு 'கல்கி 2898 ஏடி' படம் அதிக வசூலைக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பட வெளியீட்டிற்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் அமெரிக்காவில் முன்பதிவில் மட்டும் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலாகியுள்ளது. இதை அங்கு படத்தை வெளியிடும் பிரத்யங்கரா சினிமாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் நாட்கள் உள்ளதால் முன்பதிவு வசூல் இன்னும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது.