குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் சூது கவ்வும். ஆரம்பத்தில் அவரை பிரபலப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. டார்க் காமெடி கதையில் உருவான இந்த படத்தில்தான் அசோக் செல்வனும் அறிமுகமானார். இந்நிலையில் இப்படத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு பிறகு சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தயாரித்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த எந்த நடிகர்களும் இல்லாமல் முழுக்க முழுக்க புதியவர்களாக நடித்து வருகிறார்கள். குறிப்பாக, விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் இப்போது மிர்ச்சி சிவா நடித்து வருகிறார். அவருடன் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு இப்படத்தை நாடும் நாட்டு மக்களும் என்கிற டேக் லைனோடு வெளியிடப் போகிறார்கள். தற்போது சூது கவ்வும்- 2 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.