AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
அருள் நிதியை நாயகனாக வைத்து அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்டி காலனி படம் ஹிட் அடித்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திலும் அருள்நிதியே நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாகவும் விஎப்எக்ஸ் காட்சிகளும் அதில் இடம்பெற்றது. இந்நிலையில், டிமான்டி காலனி -2 படம் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ் கூறுகையில், ஒரு இறையை தவறவிட்ட மிருகத்திற்கு தான் அடுத்த இறையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று தெரியும். அது போல் தான் கலைஞர்களும் ஒரு படைப்பில் தோற்றுப் போகிறவர்கள் அடுத்த படைப்பில் கவனமாக இருப்பார்கள்.
இந்த டிமான்டி காலனி -2 படத்தை அஜய் ஞானமுத்து கவனமாக பார்த்து பார்த்து படமாக்கி இருக்கிறார். இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக சில படங்களில் நான் கமிட்டாகவில்லை. இந்த டிமான்டி காலனி-2 படம் முதல் பாகத்தை விட இன்னும் அதிரடியாக வந்திருக்கிறது. பல காட்சிகள் பயங்கரமாக உள்ளன. இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்து நானே பயந்து விட்டேன். அதனால் இந்த படத்தை இசையோடு கலந்து பார்க்கும் போது ரசிகர்களுக்கு இன்னும் பீதியை கொடுக்கும் வகையில் இருக்கும் என்கிறார் சாம் சி.எஸ்.