சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
மாமன்னன் படத்தை அடுத்து சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என பல படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதில், ரகு தாத்தா என்ற படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பெரியவர்களே தாய்மார்களே சினிமா ரசிகர்களே ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் ரகு தாத்தா என்ற படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தண்டோரா போட்டு சொல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.
காமெடி கதையில் உருவாகி உள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள நிலையில், அவருடன் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்தர் விஜய் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.