ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் |

லியோ படத்தை அடுத்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சியில் நடித்து வருகிறார் த்ரிஷா. கடந்த காலங்களில் அஜித்துக்கு காதலியாக பல படங்களில் நடித்த த்ரிஷா, இந்த படத்தில் அவரது மனைவியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய சில வாரங்களுக்கு பிறகு த்ரிஷாவும் அங்கு சென்று அஜித்துடன் இணைந்து நடித்து வந்தார். தற்போது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பி இருக்கிறார் த்ரிஷா. அடுத்து மலையாளத்தில் டொவினோ தாமஸ உடன் நடித்து வரும் ஐடென்டிட்டி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வரும் த்ரிஷா, மீண்டும் ஜனவரி மாதத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.