நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சினிமா உலகம் 90களில் இருந்ததைப் போல 2 கே-க்குப் பிறகு இல்லை என்பது உண்மை. 2000ம் ஆண்டிற்குப் பிறகுதான் திருட்டு விசிடி, பின்னர் இணைய பைரசி, அடுத்து ஓடிடி தாக்கம் என பல சவால்களை எதிர்கொண்டது. இதனால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
போதாக்குறைக்கு தியேட்டர்களில் தின்பண்டங்களின் அதிக விலை, பார்க்கிங் கட்டணம், டிக்கெட் கட்டணம் என மற்றொரு பக்கமும் பிரச்சனை இருந்ததால் கடந்த சில வருடங்களில் சிறிய படங்களுக்கான வரவேற்பு முற்றிலுமாகவே குறைந்து போனது. ஒரு சில சிறிய படங்கள் மட்டுமே தப்பிக்கின்றன.
இந்நிலையில் இந்த வாரம் வெளியாக உள்ள 'ஆயிரம் பொற்காசுகள்' என்ற படத்தை வெளியிடும் தயாரிப்பாளர், இயக்குனர் கேயார், அப்படத்தைப் பார்க்க வருபவர்கள் ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொரு டிக்கெட் இலவசம் என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறார். இதன் மூலம் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என்பது அவரது எண்ணம்.
கடந்த சில வருடங்களாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் தியேட்டர்காரர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை அவர்கள் திரையிடத் தயங்குகிறார்கள், தியேட்டர்களைத் தருவதுமில்லை என்ற குற்றச்சாட்டு அதிகம் இருக்கிறது.
அதை மாற்றுவதற்கான முதல்படியாக கேயார் இந்த இலவச டிக்கெட் என்பதை அறிமுகப்படுத்துவது ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.
பெரிய படங்களுக்கு உள்ள டிக்கெட் கட்டணத்தைக் குறைத்தும் கூட ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கலாம். சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் வாரத்தில் ஒரு நாள் 99 ரூபாய் கட்டணம் என்று நடைமுறையில் உள்ளது. அதை சிறிய படங்களுக்கான கட்டணமாக நிர்ணயித்தால் அந்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் வர வாய்ப்புள்ளது.
கேயார் எடுத்துள்ள இந்த முதல் திட்டம் அடுத்தடுத்து ஏதாவது மாற்றங்களைக் கொண்டு வந்தால் அது சிறிய படங்களை வாழவைக்கும் என சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். ரசிகர்கள் தரும் ஆதரவுதான் இதற்கான வெற்றி, பொறுத்திருந்து பார்ப்போம்.