‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கடந்த வருடம் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது, தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மூலமாக படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி அதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது இந்திய அளவில் தெரிந்த நடிகராகிவிட்டார். தற்போது காந்தாரா சாப்டர் 1 படத்திற்காக தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றை தனது ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை மூலமாக தத்தெடுத்துள்ளார். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் முன்னெடுப்பாக இந்த செயலில் இறங்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி. இது தொடர்பாக இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமத்தில் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பெரியவர்களுடன் கலந்துரையாடினார் ரிஷப் ஷெட்டி.




