ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படம் நாளை (டிச., 15ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படம் பொங்கலுக்கு வருமா என்ற சந்தேகமும் இருந்து வந்தது.
இந்த நிலையில் ரிலீஸ் தேதியை தனுஷ் தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். ஒரு பைக்கின் மீது தான் படுத்திருக்கும் படம் ஒன்றை வெளியிட்டு "கேப்டன் மில்லர்... டிரைலர் விரைவில். பொங்கல் ரிலீஸ்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.