ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரித்துள்ள படம், 'வட்டார வழக்கு'. சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி இயக்குநரும், தயாரிப்பாளருமான கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறியதாவது:
இது 1985-ல் நடப்பது போன்ற கதையைக் கொண்ட படம். உறவினர்களுக்குள் நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் 'வட்டார வழக்கு' என்று தலைப்பு வைத்துள்ளோம். மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி இருக்கிறது. படம் உண்மைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். கதையும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.
இது பங்காளிகளுக்குள் நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்ட படம். 40 வருடங்களுக்கு முன் கிராமங்களில் இருந்த கலப்படமில்லாத காதல், பகை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத மனிதர்களைப் பற்றிய கதையை ரத்தமும் சதையுமாகச் சொல்லி இருக்கிறேன். பிளாஷ்பேக் காட்சி 1960-களில் நடப்பது போல வரும். அதற்காக, பழமையான கிராமத்தைத் தேட கஷ்டப்பட்டோம். கடைசியில் கல்லுப்பட்டியில் எதிர்பார்த்த இடம் கிடைத்தது. அங்கு படமாக்கினோம். வருகிற 29ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. என்றார்.