மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அர்ஜுனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கிய கலகத்தலைவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிக்பாஸ்-1 சீசன் டைட்டில் வின்னர் ஆரவ்வும் தற்போது விடாமுயற்சியில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆரவ்.