பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இந்தியத் திரையுலகத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ள 'சலார்' படம் இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்கள்தான். ஆனால், அந்தப் படங்கள் வியாபார ரீதியாக 'பாகுபலி 2' படம் பெற்ற வசூலைப் பெற முடியவில்லை. சொல்லப் போனால் நஷ்டத்தைக் கொடுத்துள்ள படங்களாகவே இருந்துள்ளன.
“சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ்” ஆகிய மூன்று படங்களுமே மொத்தமாக தோல்விப் படங்கள்தான். 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டும் லாபத்தைக் கொடுத்ததாகச் சொன்னார்கள். அந்தப் படங்களை பிரபாஸ் நிறையவே பிரமோஷன் செய்தார். ஆனாலும், அவை படத்தின் வசூலுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யவில்லை.
இந்நிலையில் 'சலார்' படத்தின் பிரமோஷன் சுற்றுப்பயணம் எதற்கும் வர மாட்டேன் என பிரபாஸ் சொல்லிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது திடீர் அறிவிப்பால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழுவினர் தவித்து வருகிறார்கள். படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் எந்தவிதமான சுற்றுப்பயணமும் இருக்காது என்றே தெரிகிறது.
நடிகர்கள், நடிகைகள் ஆகியோரை வீடியோ இன்டர்வியூ எடுத்து அதை மட்டும் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.