காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் டிச., 24ல் பிரமாண்ட விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்த இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா சங்கமும் ஒன்று கூடி உள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்க இருந்தனர். அவர்களுக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் பன்மொழியில் இருந்தும் முக்கிய கலைஞர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் நடக்கும் என தெரிகிறது. தற்போது சென்னையில் பெய்த பெரு வெள்ளம் பாதிப்பால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.