ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை சமந்தா இந்த வருடத்திலேயே இரண்டு படங்கள் ஒரு வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துவிட்டு அடுத்ததாக செலெக்ட்டிவ்வான படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். மீதி நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா, நண்பர்களுடன் பயணம் என ஜாலியாக பொழுது போக்கி வருகிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் சமந்தா.
அன்று விளையாட்டு தினம் என்பதால் போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரையும் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி விளையாட செய்தார். குழந்தைகளும் பதிலுக்கு சமந்தாவிற்கு தங்கள் அன்பையும் வரவேற்பையும் தெரிவித்தன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து சமந்தா கூறும்போது, 'ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை மற்றும் ஓர் ஆசிரியர்.. இந்த உலகத்தையே மாற்றிவிட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.