ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! |

ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இப்படம் ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் ஓடிடி வெப் தொடராக மாறியதால் இதிலிருந்து மம்முட்டி வெளியேறினார். இப்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தமிழில் ஆரண்ய காண்டம், பிகில், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.