தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

ஹாலிவுட் முன்னணி நடிகர் மைக்கல் டக்ளஸ். ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளை பெற்றவர். சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு 'சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
விருதை வாங்குவதற்காக இந்தியா வந்த மைக்கேல் டக்ளஸ், தற்போது தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வந்தவர் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். அவருடன்மனைவி கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் மகன் டிலானும் வந்திருந்தார்.
கோவிலில் சுற்றிப் பார்த்த அவர் அதன் பிரம்மாண்டத்தையும், ராஜ கோபுரத்தையும் பார்த்து வியந்தார். அது குறித்து கேட்டு அறிந்தார். மத்திய, தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.