2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கியதில் ஏற்பட்ட மழையின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. பெரும்பாலும் சென்னையில் வசிப்பவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் சிக்கி அவதிப்பட்டனர். சாதாரண ஜனங்கள் மட்டுமல்ல விஷ்ணு விஷால், நமீதா, ஆமிர்கான், போன்ற பிரபலங்கள் கூட மழைநீர் சூழப்பட்டதால் தங்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன், சென்னையில் மிக மையப் பகுதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தான் வசிக்கும் தெருவில் சூழப்பட்ட சாக்கடை நீரால் தானும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இரண்டு நாட்களாக தவித்தது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டமாக ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “இந்த பகுதியில் எப்போதுமே மழை நீர் தேங்காது. குறிப்பாக 2015ல் பெய்த மழைக்கு கூட இங்கே நீர் தேங்கவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் காரணமாக இந்த முறை மழை நீர் தேங்கியதுடன் சாக்கடை நீரும் சேர்ந்து கொண்டு தரைத்தளத்தில் வசிப்பவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எங்களை காப்பாற்றி அழைத்துச் செல்லுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.