ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
அதிக வட்டி தருவதாக கூறி, ஏராளமானோரிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு சென்றுவிட்டார். இதனால், அவரை தேடப்படும் நபராக அறிவித்து 'லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.
இந்த மோசடி வழக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை, சினிமா தயாரிப்பது தொடர்பாகத்தான் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களோடு வரவு செலவு வைத்துக் கொண்டதாக ஆர்.கே.சுரேஷ் மறுப்பு தெரிவித்திருந்தார். அதோடு தன் மீது தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 10ம்தேதி அவர் நாடு திரும்புவதாக கூறப்பட்டு இருந்தது. ஆர்.கே.சுரேஷ் 12 கோடி மோசடி செய்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், அவரை கைது செய்யாவிட்டால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12ம்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆர்.கே.சுரேசை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதியை போலீசார் பெற வேண்டும். என்று உத்தரவிட்டு வழக்கை வருகிற 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்.