ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது |
2001ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆளவந்தான்'. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரவீனா டாண்டன், அனுஹாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். அன்றைய தேதியில் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் தயாராகி இருந்தது. என்றாலும் அப்போது படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதனால் தயாரிப்பாளர் தாணு பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இதுகுறித்து பின்னாளில் அவர் கூறும்போது “பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. திட்டமிட்டதை விட 3 மடங்கு செலவானது. சரியான திட்டமிடல் இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு பல ஆண்டுகள் ஆனது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தாணு படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார். உலகம் முழுவதும் ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இன்றைக்கு திரைப்படங்களில் நவீன தொழில்நுட்பத்தை வரவேற்கும் ரசிகர்களுக்கு ஆளவந்தான் ஆச்சர்யமூட்டும் படமாக இருக்கும் என்கிறார்கள்.