ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‛லியோ'. விஜய் உடன் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்தனர். அனிருத் இசையமைத்தார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரித்தார். படம் ரிலீஸிற்கு முன்பிலிருந்து ரிலீஸான பின்பு வசூல் வரை தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் நன்றாக உள்ளது என தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் அது உண்மையில்லை என சர்ச்சையும் நிலவுகிறது. குறிப்பாக தியேட்டர் உரிமையாளர்களே இந்த படத்தின் வசூலால் தங்களுக்கு லாபம் இல்லை என கூறினர். ஒருவாரத்தில் ரூ.461 கோடி வசூலித்ததாக அறிவித்த தயாரிப்பு தரப்பு தற்போது 12 நாளில் ரூ.540 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை(நவ., 1) படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் விஜய்யும் கலந்து கொள்ள உள்ளார்.