பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீ பிரசாத். சென்னையில் அவர் வசித்தாலும் அதிகமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்ததில்லை. வருடத்திற்கு ஓரிரு தமிழ்ப் படங்களுக்குத்தான் இசையமைக்கிறார்.
தற்போது தமிழில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்திற்கும், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து தனுஷின் 51வது படத்திற்கு இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தனுஷ் நடித்து 2011ல் வெளிவந்த 'வேங்கை' படத்திற்கு இசையமைத்திருந்தார் தேவிஸ்ரீ பிரசாத். சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு அவருடன் மீண்டும் இணைய உள்ளார். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.