லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழில் கே.பாக்யராஜ் இயக்கிய வீட்டுல விசேஷங்க என்ற படத்தில் அறிமுகமானவர் பிரகதி. அதன் பிறகும் பல படங்களில் நடித்த அவர், சீரியல்களிலும் நடித்து வருகிறார். தனது 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பிரகதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து விட்ட பிரகதி நீண்ட காலமாக மறுமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது 47 வயதாகும் பிரகதி, தெலுங்கு சினிமாவைச் சார்ந்த ஒரு தயாரிப்பாளரை விரைவில் மறுமணம் செய்ய இருப்பதாக தெலுங்கு மீடியாவில் செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியை பார்த்து கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் பிரகதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மறுமணம் குறித்து தவறான செய்தி வெளியிட்டதாக சொல்லி அந்த தொலைக்காட்சியை மிக கடுமையாக கண்டித்து ஒரு வீடியோ வெளியிட்டார். பின்னர் அதை நீக்கிவிட்டார்.
அதில், எனக்கு 47 வயதாகிவிட்டது. இப்போது மறுமணத்தை பற்றி என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் தனிமையில் இருந்துவிட்டேன். என்ன ஆதாரத்துடன் இப்படி பொய்யான செய்திகளை வெளியிட்டீர்கள். கொஞ்சமாவது பொறுப்புடன் இருங்கள்'' என கூறி உள்ளார்.