‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் விக்ரமன். புது வசந்தம் தொடங்கி பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தை போல உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். பெரும்பாலும் காதல் மற்றும் குடும்ப படங்களை இயக்கி உள்ளார். கடைசியாக நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கினார்.
இவரது மனைவி ஜெயப்பிரியா. நடன கலைஞரான இவர் முதுகு வலிக்காக சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் தவறான சிகிச்சையால் கடந்த ஐந்தாண்டுகளாக நடக்க முடியாத சூழலில் படுக்கையில் உள்ளார். இதனால் மனைவியை அருகில் இருந்து கவனித்து வரும் விக்ரமன் அவரின் மருத்துவ செலவுக்காக சொத்துக்களை விற்று வருகிறார்.
இதுதொடர்பாக ஜெயப்பிரியா அளித்த பேட்டி தினமலர் இணையதளத்தில் வெளியானது. அதன்பின்னர் தான் அவர் இப்படி ஒரு பிரச்னையில் இருப்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. தற்போது விக்ரமன் மனைவிக்கு உதவ பலரும் முன் வந்துள்ளனர். இந்த விஷயம் அரசின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு உதவ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள விக்ரமன் இல்லத்திற்கு இன்று(அக்., 30) டாக்டர்கள் உடன் வருகை தந்த அமைச்சர் மா.சுப்ரமணியம் நடந்த விஷயங்களை விக்ரமனிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவரது மனைவி ஜெயப்பிரியாவையும் சந்தித்து நலம் விசாரித்தார். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர்.
இதுபற்றி விக்ரமன் கூறுகையில், ‛‛தவறான சிகிச்சையால் என் மனைவி நடக்க முடியாமல் போனார். இதுபற்றி அமைச்சர் மா சுப்ரமணியன் வீட்டுக்கு வந்து நேரில் பார்த்தார். உடன் டாக்டர்கள் பட்டாளத்தையே அழைத்து வந்தார். என் மனைவியை பரிசோசித்தனர். சிறப்பான சிகிச்சை அளித்து குணமடையச் செய்கிறோம் என உறுதியளித்தனர். இந்த நேரத்தில் முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவி குணமாக வேண்டும் அது தான் முக்கியம்,” என்றார்.