தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
பள்ளி பருவத்தில் வருவது காதல் அல்ல, அது இன கவர்ச்சி எனவே பள்ளி மாணவர்கள் காதலிப்பது போன்றும், டூயட் பாடுவது போன்றும் படங்களில் காட்சி வைக்க கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. ஆனால் அதையும் மீறி அவ்வப்போது பள்ளி பருவ காதல் படங்கள் வெளிவரத்தான் செய்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'மார்கழி திங்கள்' படத்திலும் பள்ளி பருவ காதல்தான் கதை களமாக இருந்தது.
தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் நினைவெல்லாம் நீயடா படமும் பள்ளி பருவ காதலை களமாக கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தில் பிரஜன் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது : பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. பழனி பாரதி பாடலை எழுத, கார்த்தி பாடியுள்ளார். தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் பள்ளி மாணவ மாணவிகளாக நடிக்கும் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். என்கிறார் ஆதிராஜன்.