லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'லியோ'. இப்படம் உலக அளவில் 400 கோடி வசூலித்துள்ளதாக உலக பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் 'காம்ஸ்கோர்' அறிவித்துள்ளது. உலக அளவில் 48.5 மில்லியன் யுஎஸ் டாலர்களை இப்படம் வசூலித்து உலக பாக்ஸ் ஆபீசின் டாப் 10 பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 402 கோடி ரூபாய்.
மேலும், தமிழகத்தில் இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்து ரூ.108 கோடி வசூலித்துள்ளதாக இங்குள்ள பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டும் 3 நாட்களில் ரூ.32 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளதாக அங்கு படத்தை வெளியிட்ட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது போல கர்நாடகாவில் 4 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது போல கேரளாவிலும் ரூ.25 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்று சொல்கிறார்கள். தென்னிந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ.180 கோடி வசூலித்திருக்கலாம் என்பது முதல் கட்டத் தகவலாக உள்ளது.
படத் தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூல் தொகையை மட்டும் அறிவித்து, அதன்பின் அறிவிக்கவில்லை. இனியாவது வசூல் தொகையை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.