இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இப்போது இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர்கள் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர். இதற்கு பிறகு படப்பிடிப்பு இஸ்தான்புல்லில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, இதனபிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . கடந்த மாதத்தில் இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது ஆனால், 'லியோ' படம் வெளியாகும் வரை இதுகுறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இப்போது இதன் பூஜை வீடியோவை வருகின்ற ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய தினங்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.