‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
இலங்கை சினிமாவின் முன்னணி இயக்குனர் பிரசன்ன விதானகே. இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் போரினால் மனித குலத்திற்கு ஏற்படும் அழிவுகளை பற்றியதாக இருக்கும். தமிழருக்கும், சிங்களருக்கும் இடையே நடந்த பிரச்னைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய 'டெத் ஆன் எ புல் மூன் டே', வித் யு வித்தவுட் யு' ஆகிய படங்கள் உலக புகழ்பெற்றவை.
இந்நிலையில், தற்போது அவர் எழுதி இயக்கியிருக்கும் புதிய படம் 'பேரடைஸ். இந்த படத்தில் மலையாள நடிகர்களான ரோஷன் மேத்தீவ், தர்ஷனா ராஜேந்திரன் நடித்துள்ளனர். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நியூட்டன் சினிமா தயாரித்துள்ளது.
போருக்கு பிந்தைய தற்போதைய இலங்கைக்கு சுற்றுலா வரும் ஒரு மலையாள தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை பார்த்த இயக்குனர் மணிரத்னம் இதனை தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறார். ஏற்கெனவே இந்த படம் தென்கொரியாவின் புகழ்பெற்ற பூஷன் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான கிம் ஜிஜோக் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.