விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
தமிழ் திரையுலகில் ஹீரோக்களுக்கு அடுத்தபடியாக முக்கியமான வேடங்களில் நடிக்கவோ அல்லது வில்லனாக நடிக்கவோ மற்ற மொழிகளில் இருந்து நடிகர்களை அழைத்து வரும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மற்ற மொழி நடிகர்களும் தமிழில் நடிக்கும்போது இன்னும் மிகப்பெரிய அளவில் தங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதால் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு சமீபத்திய உதாரணமாக ஜெயிலர் படத்தில் வெறும் பத்து நிமிட காட்சிகள் மட்டுமே வந்து செல்லும் நடிகர் சிவராஜ் குமாருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை சொல்லலாம்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர், அடுத்து தெலுங்கில் ஒரு படம் என சிவராஜ்குமார் மற்ற மொழிகளில் நடிக்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பே தமிழில் அஜித் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது அதை ஏற்க மறுத்து விட்டார் சிவராஜ் குமார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது. “அது எந்த படம் என சரியாக நினைவில்லை.. அந்த சமயத்தில் நான் கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். அதை தவிர்த்து விட்டு தமிழ் படத்தில் நடிக்க சென்றால் என்னுடைய சக நடிகர்களே நான் கன்னட படங்களுக்கு சரியான முன்னுரிமை கொடுப்பதில்லை என குறை சொல்வார்கள் என்பதாலும் கால்சீட் உள்ளிட்ட காரணங்களாலும் அந்த வாய்ப்பை மறுக்கும்படியாக ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார்.