மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ள அவதூறான வார்த்தை பலரது எதிர்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது. பல அரசியல் தலைவர்களும் விஜய் இப்படி பேசியதற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் நடிகை கஸ்தூரி அளித்த ஒரு பேட்டியில், ''இதற்கு முன்பும் தமிழ் திரை உலகில் பல படங்களில் கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அதனால் இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இருப்பினும் சிறிய நடிகர்களின் படங்களில் இது போன்ற வார்த்தைகள் இடம்பெறுவதற்கும், விஜய் போன்ற ஆளுமை மிக்க நடிகர்களின் படங்களில் இடம் பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் இது கண்டிக்கத்தக்கதாகும். அதே சமயம் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள அந்த வார்த்தைக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பொறுப்பேற்றுள்ளார். எனவே இது இயக்குனரின் தோல்வி என்றுதான் கூற வேண்டும்'' என தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார் நடிகை கஸ்தூரி.