சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகத்திற்கு வெளியே மட்டுமல்ல திரையுலகத்திலேயே பல பிரபலங்களை தனது ரசிகர்களாக கொண்டவர். தமிழகத்தையும் தாண்டி இந்திய அளவில் பல முன்னணி நட்சத்திரங்களும் இவரை தங்களது ஆதர்ச ஹீரோவாக கருதுகிறார்கள். அவருடன் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என இப்போதும் பலர் ஏங்குகிறார்கள்.
அந்த வகையில் தனது 170 வது படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்தில் முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். இதையடுத்து மலையாள திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
அப்படி சமீபத்தில் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 2018 என்கிற படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் படத்தின் தயாரிப்பாளர்களுடன் ரஜினிகாந்தை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த படம் இந்த வருடத்திற்கான இந்திய சினிமாவில் இருந்து ஆஸ்கருக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளதால் ஆஸ்கருக்கு சென்று விருது பெற்று வாருங்கள் என ரஜினிகாந்த் இயக்குனரை வாழ்த்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் மலையாள இளம் முன்னணி நடிகராக ஜெயசூர்யாவும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படி ஒரு தருணம் வந்து விடாதா என்று தான் கனவு கண்டு கொண்டிருந்தேன். அது இன்று நிறைவேறியுள்ளது. ஒரு மிகப்பெரிய ஜாம்பவான், ஒரு சூப்பர் ஸ்டாரை சந்தித்தேன் என்று சொல்வதை விட இதுவரை நான் பார்த்திராத ஒரு மிகவும் அழகான மனிதனை சந்தித்தேன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்" என கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து உதவியதற்காக காந்தாரா புகழ் நடிகரும் இயக்குனருமாக ரிஷப் ஷெட்டிக்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயசூர்யா.