தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் |
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ருத்ரன் படம் தோல்வி அடைந்தது. சந்திரமுகி 2 சுமாரான வெற்றியை பெற்றது.
தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது, " பழைய கதைகள் இனி வேலைக்கு ஆகாது. கொரோனா காலத்திற்கு பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை இயக்குனர்கள் லோகேஷ், நெல்சன் ஆகியோர் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. திரைக்கதை மற்றும் சண்டை காட்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் . நானும் இந்த புதிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளேன். இதற்கு பதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.