'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை குவித்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது நடிகர் விஜயை வைத்து 'லியோ' படத்தை இயக்கியுள்ளார். வருகின்ற அக்டோபர் 19ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு வருகிறார். இதில் ரஜினிகாந்த் 171வது படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது: "ரஜினி 171வது படம் நான் இதுவரை இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும். எனக்கு இது ஒரு புதிய முயற்சி. இந்த கதையை 20 நிமிடம் ரஜினி சாரிடம் கூறினேன். சமீபத்தில் ரஜினி சார் உடன் இப்படம் குறித்து போனில் பேசும் போது 'தூள் கிளப்பிற்லாம் கண்ணா' என ரஜினி சார் கூறினார். இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த படத்திற்காக ஆபிஸ் பூஜை நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரலில் துவங்கும்" என தெரிவித்தார்.