ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் விஜய்யின் இந்த லியோ படத்திற்கு அதிகாலை காட்சி திரையிட அனுமதி கிடைக்கவில்லை. அதனால் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், ஒரு நாளைக்கு முன்னதாகவே அதாவது அக்டோபர் 18ம் தேதியே லியோ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
அதன் காரணமாக, அக்டோபர் 18ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் பிரிமியர் காட்சிகளாக திரையிடப்பட உள்ளன. தமிழகம் முழுக்க 1000 தியேட்டர்களில் அக்டோபர் 18ம் தேதி லியோ படத்தின் பிரிமியர் காட்சி திரையிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் லியோ அதிகாலை காட்சி திரையிடப்பட உள்ளது.