தி ஓமன், தி லாஸ்ட் செப்டம்பர், சர்ச்சில்ஸ் சீக்ரெட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் மைக்கேல் கேம்பன். 2004ல் வெளியான ஹாரிபாட்டர் படத்தின் மூலம் பிரபலமானார். அப்படத்தில் புரொபசர் டம்பிள்டோராக நடித்து பலரது பாராட்டை பெற்றார். ஐரிஸ் நடிகரான இவர் 8 பாகங்களைக் கொண்ட ஹாரிபாட்டர் படத்தில் முதல் 6 பாகங்களில் நடித்திருந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த மைக்கேல் கேம்பன், தனது 82வது வயதில் இன்று (செப்.,28) காலமானார்.