ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
அடுத்தாண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது. இதனை இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
திரையுலக கலைஞர்களுக்கு மிகப் பெரிய கனவு ஆஸ்கர். உலகளவில் சினிமாவில் உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படும் இந்த விருதுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில் 2024ல் நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மயைாளத்தில் வெளியான 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது.
கேரளாவில் பெய்த பெரும் மழை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து வெளியான இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கி இருந்தார். டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சினிவாசன், லால், நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படம் ரூ.200 கோடி வசூல் சாதனை புரிந்தது.
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் 2018 படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு தேர்வாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.