ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
யு டியூப் வீடியோ தளம் வந்த பிறகு இன்று எதையுமே யு டியூபில் பார்த்து தெரிந்து கொள்ளும் வழக்கம் அதிகமாகிவிட்டது. யு டியூப் யாருக்கு உதவுகிறதோ இல்லையோ சினிமாவிற்கு நன்றாக உதவுகிறது.
திரைப்பட டிரைலர்கள், டீசர்கள், பாடல்கள், காட்சிகள் என பலவற்றை யு டியூப் தளத்தில் இலவசமாகப் பதிவேற்றி அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிகிறது. அதிகமான பார்வைகளைப் பெறும் படங்களுக்கு தியேட்டர்களிலும் வரவேற்பு அதிகமாகக் கிடைக்கிறது.
தமிழ்த் திரையுலகில், ஏன் இந்தியத் திரையுலகத்திலேயே 1500 மில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் சினிமா பாடல் என்ற பெருமையை 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் பிடித்துள்ளது. 1500 மில்லியன் அதாவது 150 கோடி பார்வைகள் என்பது சாதாரணமானதல்ல. இன்றும் கூட தினமும் அப்பாடலை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.
பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ் எழுதி தீ-யுடன் பாடிய பாடல் 'ரவுடி பேபி'. தமிழ் சினிமா இசையுலகில் இது ஒரு மகத்தான சாதனை.