அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன், விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த ஒரு படம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் வெளியாவது என்பதே பெரிய விஷயம்தான். கடந்த சில ஆண்டுகளாக இப்படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என கவுதம் மேனன் நிறையவே முயன்றார். அவரது முயற்சிகள் வீணாகவில்லை. ஒரு வழியாக முட்டி மோதி படத்தை முடித்துவிட்டார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படம் ஆரம்பமாகும் போது கவுதம் மேனன் உட்பட ஐந்து தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்க ஆரம்பித்தார்கள். இப்போது கவுதம் மேனன் தவிர மற்ற நால்வரும் விலகிவிட்டார்கள். அந்த நால்வருக்குப் பதிலாக புதிதாக ஒரு பெண் தயாரிப்பாளர் இணைந்திருக்கிறார்.
இதற்கு மேலும் இப்படம் தள்ளிப் போகாமல் அறிவித்தபடி நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என விக்ரம் ரசிகர்களும், கவுதம் மேனன் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.