2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
கடந்த 2014ம் ஆண்டில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கேத்ரின் தெரசா, கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் 'மெட்ராஸ்'. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தனர். விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் 9 வருடங்கள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு எல்லாம் அடுத்த ஆண்டில் தான் தொடங்கும் என்கிறார்கள்.