நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நடிகை கவுதமி 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் உடன் வாழ்ந்து வந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். தமிழில் கடைசியாக 'பாபநாசம்' படத்திற்கு பிறகு கவுதமி இன்னும் எந்ந தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவர் பா.ஜ., கட்சியில் உள்ளார். இந்நிலையில் ஒரு தெலுங்கு படத்தில் கவுதமி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா நடித்து வரும் திரைப்படம் 'உஸ்தாத் பகத் சிங்' . இதில் பவன் கல்யாணுக்கு அம்மாவாக கவுதமி நடிப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த வருடம் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.