பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இயக்குனர் சிம்புதேவனின் அடுத்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். மூன்று வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் 'போட்- நெய்தல் கதை' என அறிமுகப்படுத்தப்பட்டது. முழுக்க முழுக்க கடலிலேயே எடுக்கப்படும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இதில் நாயகி, நாயகனை நோக்கி ஒரு கானா பாடல் பாடுவது போன்ற சூழல். அதற்கு ஜிப்ரான் டியூன் போட.. இப்பாடலை கர்நாடக இசையரசி சுதா ரகுநாதன் பாடினால் நன்றாக இருக்கும் என இசையமைப்பாளரும், இயக்குனரும் விரும்பியுள்ளனர்.
இதற்காக சுதா ரகுநாதனை அணுகியுள்ளனர். அவர் வியப்புடன் “எனக்காக ஒரு கானா பாடலை யோசித்தது ஆரோக்கியமான பரிசோதனை முயற்சி! இசை என்பது ஒலி வடிவமே. நிச்சயம் நான் பாடுகிறேன். ஆனால் நான் லண்டனிலிருந்து இந்தியா திரும்ப மூன்று மாதம் ஆகும்!”என்று கூறினாராம். பரவாயில்லை என பட குழுவினர் மூன்று மாதம் காத்திருந்து அவர் சென்னை திரும்பியதும் பாடல் பதிவை நடத்தியுள்ளனர்.
'போட்' திரைப்படத்தை வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.