ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'கல்கி 2898 ஏடி'. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தில் மற்றொரு கேமியோ கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து இந்த படத்தில் இன்னும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான எஸ்.எஸ். ராஜமௌலியிடம் பேசபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்போது அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்க படப்பிடிப்பு துவங்கியதாக கூறப்படுகிறது.