லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ரிலீஸூக்கு தயாராகி வரும் படம் 'இறைவன்'. ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே தேதியில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சலார்' திரைப்படமும் வெளியாகிறது.