அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் கடந்த 2015ம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தில் அறிமுகமானார். அடுத்து ‛மதுரை வீரன்' என்ற படத்தில் நடித்த சண்முக பாண்டியன், அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது சண்முக பாண்டியன் தனது மூன்றாவது படமாக அன்பு என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலை சிறு வீடியோ உடன் அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு படை தலைவன் என பெயரிட்டுள்ளனர். யானைகள் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளதை முன்னோட்ட வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது.