பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? |
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ' தனி ஒருவன்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்த பிறகு ஜெயம் ரவி, மோகன் ராஜா சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக இதில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு சினிமாவில் செகன்ட் இன்னிங்ஸ் ஆக அமைந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே மோகன் ராஜா அறிவித்தார். இதிலும் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடிக்க போகிறார். கடந்த சில வருடங்களாக தனி ஒருவன் 2ம் பாகம் உருவாகவுள்ளது என கூறப்பட்டு வந்தாலும் ஏதோ சில காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது தனி ஒருவன் 2ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என்கிறார்கள் . ஏனெனில், ஆகஸ்ட் 28ம் தேதியில் தான் கடந்த 2015ம் ஆண்டில் இப்படம் வெளிவந்தது. இப்போது அதே தேதியில் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.