நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
இயக்குனர் மோகன் ராஜா கடந்த 2011ல் விஜய்யை வைத்து ' வேலாயுதம்' படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் விஜய் புதிய படத்திற்கு கதை கேட்கும் போது மோகன் ராஜா பெயர் அடிபடும்.
சமீபத்தில் மோகன் ராஜா அளித்த பேட்டி ஒன்றில், "வேலாயுதம் படத்திற்கு பிறகு விஜய்-க்கு இரட்டை வேடத்தில் ஒரு கதையை உருவாக்கினேன். அந்த கதை அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அந்த சமயத்தில் தடம் படம் வெளிவந்தது. தடம் படத்திற்கு நான் உருவாக்கிய கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. இப்போது அந்த கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன். இது அல்லாமல் புதிதாக இரண்டு கதைகள் விஜய்க்கு தயார் செய்துள்ளேன். விரைவில் விஜய் உடன் இணைவேன்'' என தனது ஆசையை தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.