ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான லலிதாம்பாள் (வயது 83) உடல்நிலை குறைவால் சென்னையில் நேற்று (ஆக., 11) மாலை 7.00 மணி அளவில் காலமானார். இவருக்கு வாசு விக்ரம், பாலாஜி என்ற இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர்.
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர் வாசு. ஏராளமான குணச்சித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். இவரது மகன் வாசு விக்ரம். பாலைவனத்தில் பட்டாம்பூச்சி, படத்தின் மூலமாக திரையில் அறிமுகமான அவர் தொடர்ந்து நீங்களும் ஹீரோதான், பரதன், மஞ்சுவிரட்டு, படையப்பா, சிவாஜி, சமுத்திரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் குணசித்ரம், வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். சித்தி, செல்லமே, செல்வி போன்ற டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கோடம்பாக்கம் ஆ.என்.நம்பியார் தெருவில் குடும்பத்தினர் உடன் வசித்து வருகிறார். இவரது தாயார் லலிதாம்பாள் வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நடிகர் எம்ஆர்ஆர் வாசு அவர்களின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான திருமதி. லலிதாம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாளும் நேற்று தான் காலமானார். ஒரேநாளில் இரண்டு நடிகர்களின் தாயார் அடுத்தடுத்து மறைந்தது தமிழ் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.