50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ்குமார், 'ஜெயிலர்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். படத்தில் ரஜினிக்கு உதவி செய்யும் 'நரசிம்மா' என்ற ஒரு தாதா கதாபாத்திரத்தில் சிறிது நேரமே படத்தில் வருகிறார். இருந்தாலும் அவரது காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. தமிழகத்திலும், கர்நாடகாவிலும் அவரது காட்சிகளுக்கு நல்ல ஆரவாரம் கிடைத்துள்ளது. அதற்காக வீடியோ மூலம் கன்னடத்திலும், தமிழிலும் நன்றி தெரிவித்துள்ளார்.
'ஜெயிலர்' படம் இப்ப எல்லா இடத்துலயும் நல்ல கலெக்ஷனோட ஓடிட்டிருக்கு, நல்ல ரிப்போர்ட்ஸ் வந்திருக்கு. நான் மோகன்லால் சார், ஜாக்கி ஷெராப், தமன்னா எல்லாரும் கேமியோ ரோல் பண்ணியிருக்கோம். இந்த அன்பைக் கொடுத்ததுக்காக நேரடியாக ஒரு நன்றி சொல்லணும். நெல்சன் குறிப்பாக ரஜினி சாருக்கு... அவர் கூட நடிக்கணும்னு எவ்வளவோ பேர் காத்துட்டிருக்காங்க. எனக்கு அந்த வாய்ப்பு வந்தது மகிழ்ச்சி, குஷி. நீங்க கொடுத்த அன்பை எப்போதும் என் இதயத்துல வச்சிருப்பேன், நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
'ஜெயிலர்' படத்தை அடுத்து தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் சிவராஜ்குமார்.