'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது விஜய்யின் 69வது படம். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கன்னட நடிகர் சிவராஜ்குமாரை அணுகியுள்ளார்கள். அது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.
“விஜய் 69ல் நடிப்பேனா என்பது தெரியாது. ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை எனக்காகச் சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய தேதிகளைப் பொறுத்தே அது அமையும். விஜய் மிகச் சிறந்த நடிகர், மனிதர். அரசியலில் அவருடைய லட்சியம் வியப்பாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் 69 படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், பிரியா மணி, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஒரு மருத்துவ சிகிச்சைக்காக சிவராஜ்குமார் அமெரிக்கா செல்லப் போவதாகவும் தகவல் உள்ளது. அதனால், அவர் விஜய் 69 படத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
ரஜினிகாந்த நடித்த 'ஜெயிலர்' மற்றும் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார் சிவராஜ்குமார்.