அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் ‛குஷி'. வெண்ணிலா கிஷோர், சச்சின் கெடகர், சரண்யா, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. குஷி படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கில் வெளியாகி உள்ளது. 2 : 46 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில் காதல் திருமணம் செய்த விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடி அதன்பின் வாழ்வில் எதிர்கொள்ளும் சண்டை, சிக்கலை பின்னணியாக வைத்து உருவாகி இருப்பது தெரிகிறது. முழுக்க முழுக்க காதல் படமாக இந்த படம் உருவாகி இருப்பதை டிரைலரை பார்க்கும்போது புரிகிறது. செப்., 1ல் படம் ரிலீஸாகிறது.