பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் |
'காக்கா முட்டை' படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் 'புது வேதம்'. இதனை ராசா விக்ரம் இயக்குகிறார். இந்த படத்தில் விக்னேஷ் ஜோடியாக நடிக்கிறார் வருணிகா.
இவர் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர். அங்கு உள்நாட்டு போர் நடந்தபோது அங்கிருந்து குடும்பத்துடன் சென்னை வந்து இங்கு செட்டிலானார். நடிப்பு மீது ஆசை கொண்ட வருணிகா சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இப்போது புதுவேதம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
சென்னையில் உள்ள குப்பை மேடுகளில் வாழும் மக்களை பற்றிய கதை இது. இதில் அவர் அந்த பகுதியில் வாழும் ஏழைப் பெண்ணாக நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.